பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு விஷயங்களைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

பள்ளிகளில் குறிப்பாக பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்ய கல்வி அமைச்சகம் உடனடியாக நிதி ஒதுக்கீட்டை வழங்கும்.

இது தொடர்பாக மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி ஜிடின் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிகளில் அவசரமான விஷயங்களைத் தீர்க்க, விரைவான நடவடிக்கை எடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட தகவல்களை அமைச்சகத்திற்கு உடனடியாக அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் ஒதுக்கீட்டை விரைவில் பயன்படுத்துவோம். அவசர பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்போம்.

அதனால்தான் PPD இன் பங்கு முக்கியமானது. ஏனெனில் அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும் என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக, அவர் பல கிராமப்புற பள்ளிகளை பார்வையிட்டார்.  Sekolah Kebangsaan (SK) Ulu Ansuan,  Beluran, SK Jambongan, SK Pantai Boring ஆகிய பள்ளிகளை பார்வையிட்டார்.

வேளாண் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர், பெலூரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டியும் உடன் இருந்தார். ஆசிரியர் குடியிருப்புகள் உட்பட பள்ளி உள்கட்டமைப்பின் வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகளை அவரது அமைச்சகம் தற்போது விவரித்து வருவதாக முகமட் ராட்ஸி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here