கிளாந்தானுக்குள் நுழையும் பிரதான சாலைகள் பழுதுபார்ப்பு, பராமரிப்புக்கு RM20.55 மில்லியன் தேவை- டத்தோ அசாமி முகமட் நோர்

கோத்தா பாரு, ஜூலை 20 :

கிளாந்தானுக்குள் நுழையும் மூன்று முக்கிய வழித்தடங்களிலுள்ள சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், RM20.55 மில்லியன் செலவில் சாலை பழுதுபார்க்கும் பணிகளுக்காக மொத்தம் 22 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் மாநில பொதுப்பணி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ அசாமி முகமட் நோர் தெரிவித்தார்.

“பொதுப்பணித் துறை (PWD) கிளாந்தானுக்கான முக்கிய நுழைவுப் பாதைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டிருந்தது, இருப்பினும், இது அரசாங்கத்தின் நிதித் திறனுக்கும் உட்பட்டது” என்று அவர் கூறினார்.

இன்று கோத்தா தாருல்னைமில் நடைபெற்ற கிளாந்தான் மாநில சட்டமன்ற அமர்வின் போது முகமட் சியாபுதீன் ஹாஷிம் (பிஎன்-கலாஸ்) கேட்ட துணைக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டு, கிளந்தான் PWD, கூவா மூசாங்கிற்கு அருகிலுள்ள பிரதான சாலையில் பழுதுபார்க்கும் நிலையிலுள்ள 16 இடங்களை அடையாளம் கண்டுள்ளது, இதற்கு RM 14.90 மில்லியன் மதிப்பீட்டில் பழுதுபார்ப்பு நிதி தேவைப்படும், ஆனால் RM 2.55 மில்லியன் செலவில் மூன்று இடங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

“கெரிக் வழியாக கிளாந்தானுக்கான உள் நுழைவு சாலையைப் பொறுத்தவரை, RM8 மில்லியன் செலவில் பழுதுபார்ப்பதற்காக எட்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் ஐந்து இடங்களை பழுதுபார்ப்பு மற்றும் பரமரிப்பிற்கான RM4.7 ஒதுக்கீட்டை மட்டுமே நாங்கள் பெற்றோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், திரெங்கானு வழியாக கிளாந்தானுக்கு செல்லும் பாதையிலுள்ள ஏழு இடங்களில், சாலைகளை சீரமைக்க RM 5.75 மில்லியனுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் RM850,000 ஒதுக்கீட்டில் ஒரு இடத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here