கோலாலம்பூர், ஜூலை 20 :
மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் (எம்ஓசி) முன்னாள் தலைமை பொதுச்செயலாளர் டத்தோ சியாக் கோக் சி தனது 83-ஆவது வயதில் காலமானார். அவரது இழப்பு நாட்டின் விளையாட்டுத்துறைக்கும் மலேசிய ஒலிம்பிக் கவுன்சிழும் பேரிழப்பு என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
கோக் சியின் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த பிரதமர், இதற்கு முன்னர் நாட்டில் விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் மறைந்த கோக் சி வழங்கிய அனைத்து சேவைகள் மற்றும் பங்களிப்புகளை அரசாங்கம் பெரிதும் பாராட்டுவதாகக் கூறினார்.
“இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களின் அன்புக்குரியவரின் மறைவுக்கு எனது இரங்கல்கள் மற்றும் இந்த கடினமான தருணங்களை எதிர்கொள்வதில் நம்பிக்கையோடு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று, அவர் இன்று தனது பேஸ்புக்கில் ஒரு பதிவில் கூறினார்.
83 வயதான கோக் சி கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததார் என்பது நினைவுகூரத்தக்கது.