பிகேஆரில் நூருல் இஷா துணைத் தலைவராகவும் சைஃபுதீன் பொது செயலாளராகவும் நியமனம்

சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் பிகேஆரின் பொதுச் செயலாளராகவும், ஃபஹ்மி ஃபட்சில் கட்சியின் தகவல் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் மகள் நூருல் இஷா  அக்கட்சியில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புட்டாடான் நாடாளுமன்ற உறுப்பினர் அவாங் ஹுசைனி சஹாரி மற்றும் க.சரஸ்வதி ஆகியோரும் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், பிகேஆர் தித்திவாங்சா கிளைத் தலைவர் ஜாஹிர் ஹாசன் பிகேஆர் தலைமை அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் மத்திய தலைமைக் குழுவில் இடம் பெற்ற மற்ற ஐந்து பேர் முன்னாள் காப்பா நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன், தவாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டினா லியூ, பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், சரவாக் பிகேஆர் தகவல் தலைவர் அபுன் சூய் அனிட் மற்றும் ஜோகூர் பிகேஆர் இளைஞர் தலைவர் ஆர். யுனேஸ்வரன்.

நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் மத்திய தலைமைக் குழு கூட்டத்தின் பின்னர் இந்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சைபுதீன் பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் ரபிசி ரம்லியிடம் தோல்வியடைந்தார். இதற்கிடையில், துணைத் தலைவர் பதவிக்கு ஃபஹ்மி போட்டியிட்டார். நூருல் டிசம்பர் 2018 இல் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

செவ்வாய்கிழமை நடைபெறும் பக்காத்தான் ஹராப்பான் மன்ற தலைவர்கள்  கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சியின் பிரதிநிதிகள் ரஃபிசி, துணைத் தலைவர்கள் நூருல் இசா மற்றும் சான் லிஹ் காங், சைஃபுதீன் மற்றும் வனிதா பிகேஆர் தலைவர் ஃபத்லினா சிடெக் மற்றும் பிகேஆர் இளைஞர் தலைவர் ஆடம் அட்லி ஆகியோர் பெயரையும் அன்வார் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here