9 மணி நேரம் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்ட 2 சிறார்கள்; பாதுகாப்பாக மீட்பு

கோலாலம்பூர்:

டேசா பெட்டாலிங்கில் ஓர் அடுக்குமாடி பகுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமல் போனதாக நேற்று முன்தினம் புகார் செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 9 மணி நேரத்திற்கு பின்னர் 11 வயது ஃபாய்க் அதிவாரா Faiq Adiwara, 10 வயது முஹம்மட் ஹரித் அப்சாயர் Muhammad Harith Absayar ஆகிய அந்த இரண்டு சிறுவர்களும் ஒரு லிஃப்டுக்குள் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் லிஃப்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது சிசிடிவி கேமராவில் தெரிய வந்தது.

குவே வாங்குவதற்காக பிற்பகல் இரண்டு மணியளவில் அச்சிறார்கள் வீட்டில் இருந்து வெளியாகி இருக்கின்றனர்.

இரவு 7.00 மணியாகியும் வீடு திரும்பாததால் தேடும் பணி தொடங்கியது.

இரவு 10 மணிக்கு மேல் தான் அவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

அந்த அடுக்ககத்தின் நிர்வாகம் முன்கூட்டியே ஏன் சிசிடிவி – யை பரிசோதிக்கவில்லை என்று பொது மக்கள் சாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here