RM80,000 மேற்பட்ட மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

சிபு, ஜூலை 22:

நேற்றிரவு இங்குள்ள ஜாலான் தியோங் ஹுவா என்ற இடத்தில், சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த உள்ளூர் நபரை சோதனை செய்ததில், அவரிடமிருந்து RM86,430 மதிப்புள்ள 576.20 கிராம் கெட்டமைனை பறிமுதல் செய்ததுடன் அந்நபரையும் போலீசார் கைது செய்தனர்.

சிபு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் சுல்கிப்லி சுஹைலி கூறுகையில், 43 வயதான அந்த நபர் இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டபோது, 6.20 கிராம் எடையுள்ள ஐந்து கெட்டமைன் பொட்டலங்களை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சாலையில் உள்ள ஒரு வீட்டினை சோதனையிட்டனர், அங்கு 570 கிராம் எடையுள்ள பல்வேறு அளவுகளில் கெட்டமைன் படிகங்கள் அடங்கிய 44 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

“ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அந்த நபருக்கு முன்னைய குற்றப் பதிவுகளும் இல்லை, அவர் தனியாக வேலை செய்கிறாரா அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து வேலை செய்கிறாரா என்பதை அடையாளம் காணும் பணியில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here