நண்பர்களுடன் ஆற்றில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்..!

ஜோகூர் பாரு, ஜூலை 23 :

இங்குள்ள கம்போங் பாகார் பத்து அருகே ஆற்றில் குளித்த இரண்டு ரோஹிங்கியா சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள், மஹ்மோத், 11, மற்றும் நோஜுமுல்லா பிபீர் அகமட் , 14, என அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று காலை அவர்களது சட்டம் கண்டெடுக்கப்பட்டது.

ஸ்கூடாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு அதிகாரி, முகமட் ரிதுவான் அக்யார் கூறுகையில், இன்று காலை 5.24 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக அவரது தரப்புக்கு அவசர அழைப்பு வந்தது.

“நேற்று நண்பகல் 2 மணியளவில் பாதிக்கப்பட்ட இருவரும் ஏனைய எட்டு நண்பர்களுடன் ஆற்றில் குளித்ததாக அறியமுடிகிறது. இவ்விரு சிறுவர்களும் நீரில் மூழ்கியதாக நம்பப்பட்டதும், மற்ற நண்பர்கள் பீதியடைந்து அமைதி காத்தனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் வீடு திரும்பாததால், அவர்களது தந்தை தனது மகனின் நண்பர்களை தேடிச்சென்று வினவினார், வற்புறுத்திய பின்னரே அவர்கள் அச்சம்பவத்தை தெரிவித்தனர்,” என்று அவர் கூறினார்.

அவர்களது நண்பர்கள் கூறியபடி பாதிக்கப்பட்டவர்களின் கடைசி இருப்பிடத்தின் அடிப்படையில், அவரது துறையினர் தேடுதல் நடத்தியதாக கூறினார்.

“காலை 9.50 மணியளவில், நீரில் மூழ்கியதாக நம்பப்படும் முதலாமவரது உடல் , அவர்கள் கடைசியாக இருந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில், நீரின் மேற்பரப்பில் தேடும் போது தீயணைப்புத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

“இதற்கிடையில், தீயணைப்புத் துறையினர் காலை 10.35 மணியளவில் 100 மீட்டர் சுற்றளவில் டைவ் செய்தபோது, ​​​​கடைசி இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் டைவ் செய்தபோது இரண்டாவது பாதிக்கப்பட்டவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டது.

“இரு சிறுவர்களின் உடல்களும் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here