அக்டோபர் 1 முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் ரொக்கமில்லா பண பரிவத்தனை செயல்படுத்தப்படும்

கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட அனைத்து சுகாதார அமைச்சகத்தின் (MOH) வசதிகளும் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் ஈவாலெட்டுகள் மூலம் மட்டுமே ரொக்கமில்லாத பண பரிவர்த்தனை செயல்படுத்தப்படும்.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஹர்ஜீத் சிங், இந்த புதிய முறை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார். இருப்பினும், பணப் பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படும்.

பணமில்லாமல் போவது என்பது பொது நிதி சம்பந்தப்பட்ட கசிவுகளின் அபாயங்களைக் குறைப்பதற்கும், பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்குவதற்கும், கோவிட்-19 பாதிப்பைக் குறைப்பதற்கும், வருவாய் சேகரிப்புச் செயல்பாட்டில் செலவுகளைக் குறைப்பதற்கும் ஆகும் என்று ஹர்ஜீத் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here