நெடுஞ்சாலையில் வேனின் டயர் வெடித்ததில் இந்திய சுற்றுப்பயணியான 74 வயது மூதாட்டி பலி; 9 பேர் காயம்

ஈப்போ: பிளஸ் நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கிச் செல்லும் KM178.7 இல் நேற்று நடந்த விபத்தில் வேன் கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். ஒரு சிறுவன்  உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மாலை 6.20 மணியளவில் அழைப்பு வந்ததையடுத்து பாகன் செராய் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இடத்திற்கு வந்தபோது, ​​தீயணைப்புத் துறையினர் 10 பேரை ஏற்றிச் சென்ற  வேன் டயர் வெடித்ததால் விபத்துக்குள்ளானதைக் கண்டறிந்தனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஒரு பெண் உயிரிழந்ததாகவும், சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைக்காக தைப்பிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

விபத்தில் பலியானவர்  திருமணத்திற்காக இந்தியாவில் இருந்து சுற்றுபயணியாக வந்திருந்த 74 வயது நூர்ஜஹாசன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.  மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here