உலு சிலாங்கூரிலுள்ள 188 பகுதிகளுக்கு ஆகஸ்ட் 9 முதல் இரு நாட்களுக்கு நீர் விநியோகத்தடை

கோலாலம்பூர், ஜூலை 26 :

உலு சிலாங்கூரிலுள்ள மொத்தம் 188 பகுதிகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் விநியோகம் தடைபடும் என்று ஆயிர் சிலாங்கூர் (Air Selangor) நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் எலினா பாசேரி தெரிவித்துள்ளார்.

இந்த நீர் விநியோகத்தடை காலை 9 மணிக்குத் தொடங்கும் என்றும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்குள் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

சுங்கை ராசா நீர் சுத்திகரிப்பு ஆலையில் மேம்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதனால், இந்த இடையூறு ஏற்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

அத்தோடு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ள வேளையில் அப்பகுதிகளிலுள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் லோரிகளை ஆயிர் சிலாங்கூர் அனுப்பும் ” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைக்கவும், இடையூறு காலம் முழுவதும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

இது தொடர்பான மேலதிக மற்றும் புதுப்பிக்கப்பட்ட் தகவல்களுக்கு ஆயிர் சிலாங்கூர் செயலி, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பு சேனல்கள், http://www.airselangor.com என்ற இணையதளம் மூலம் பயனர்கள் அவ்வப்போது இந்த திட்டமிடப்பட்ட நீர் வழங்கல் குறுக்கீடுகள் பற்றிய தகவலைப் பெறலாம் அல்லது 15300 இல் ஏர் சிலாங்கூரை அழைக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here