தொடக்கப் பள்ளி மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கின் விசாரணை நிறைவு – சந்தேக நபர் போலீஸ் பிணையில் விடுதலை

லங்காவி, ஜூலை 26 :

தொடக்கப் பள்ளியில் பெண் மாணவிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைதான ஆசிரியரின் வாக்குமூலத்தை போலீசார் பெற்றுள்ளதுடன் அவ்வழக்கின் விசாரணை முடிவடைந்ததாக லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஷரிமான் ஆஷாரி கூறினார்.

விசாரணை முடிவடைந்த இந்த வழக்கு,மாநில காவல் படைத் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அவரது பிரிவினர் அனுப்புவார்கள் என்றார்.

“கடந்த புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்ட 48 வயதான ஆசிரியர் மேலதிக அறிவுறுத்தல்களுடன் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

“சம்பந்தப்பட்ட ஆசிரியர், பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன,” என்று அவர் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஷரிமான் கூறுகையில், அதே நேரத்தில் விசாரணையை முடிக்க சில ஆவணங்கள் போலீஸ் தரப்பிலிருந்து பெறப்படும் என்றார்.

கடந்த வியாழன் அன்று, 12 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்ததை விசாரிக்க உதவுவதற்காக, இங்குள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆண் ஆசிரியரை போலீசார் கைது செய்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

அன்றைய தினம் காலை பாதிக்கப்பட்டமாணவியின் தாயார் செய்த புகாரையடுத்து சந்தேகநபர் நண்பகல் 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் படி இந்த வழக்கின் விசாரணை நடத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here