பாராசிட்டமால் மாத்திரையின் விற்பனை 238% அதிகரித்துள்ளது என்கிறார் சுகாதார அமைச்சர்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26 :

முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பாராசிட்டமால் மாத்திரையின் விற்பனை 238% அதிகரித்துள்ளது.

“காய்ச்சல், சளி மற்றும் இருமல் மருந்துகளுக்கான தேவை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. உதாரணமாக, கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பாராசிட்டமால் மாத்திரையின் விற்பனை 238% அதிகரித்துள்ளது” என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி, பதில் நேரத்தின் போது தெரிவித்தார்.

சீனாவின் மொத்த ஊரடங்கு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை மருந்துவகைகளின் விநியோகத்தை சீர்குலைப்பதற்கான காரணங்களாக உள்ளன என்று கைரி மேற்கோள் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here