10 மாதங்கள் முன் காணாமல் போயிருந்த முஹம்மது இமானின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

பாசீர் கூடாங், “அல்ஹம்துலில்லாஹ், இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்….என் மகன் அவனுடைய படைப்பாளரிடம் திருப்பி அனுப்பப்பட்டான்” என்று 55 வயதான அஸ்மாவதி அப்துல்  காதிர் கூறினார்.

அவரது மூத்த மகன் முஹம்மது இமான் அக்மர் துல்கர்னைன் 10 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது உடல் சுங்கை அபியிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட காரில் சிக்கியிருந்தன. இரண்டு நாட்களுக்கு கண்டெடுக்கப்பட்ட அவரின் உடல் பெக்கானில் உள்ள நெனாசி அபி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) அதிகாலை கம்போங் பாசீர் பூத்தே இஸ்லாமிய கல்லறையில் அவர் சந்தித்த போது கூறினார்.

24 ஆண்டுகளாக எனக்கு கடனான  கொடுத்ததற்கு நன்றி. அல்ஹம்துலில்லாஹ், அவர் ஒரு நல்ல மகன் என்று அவர் கூறினார். அவர் தனது இளைய மகள் நூருல் இஸ் அனிசா துல்கர்னைன் 21 மற்றும் இறந்தவரின் வருங்கால மனைவி நூர்ஃபைசா மஹதி 25 ஆகியோருடன் அங்கிருந்தனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் நடைபெற்ற முஹம்மது இமான் அக்மரின் இறுதிச் சடங்கில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சுங்கை அபி-அபியில் கண்டெடுக்கப்பட்ட நிசான் கிராண்ட் லிவினாவில் கண்டுபிடிக்கப்பட்ட அவரது உடல், குவாந்தனில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, பின்னர் தாமான் ஆயர் பிருவில் உள்ள அவரது குடும்ப வீட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி, அஸ்மாவதி முஹம்மது இமான் அக்மர் காணாமல் போனது குறித்து போலீஸ் புகாரினை தாக்கல் செய்தார். காணாமல்

ஒரு நாள் முன்னதாக ஜோகூரில் உள்ள கெமாமானில் இருந்து தெரெங்கானுவிற்கு வேலைக்காக தனது வீட்டை விட்டு வெளியேறிய பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

முஹம்மது இமான் அக்மரின் எச்சங்கள் ஆற்றங்கரைக்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு முதியவரால் நிசான் கிராண்ட் லிவினா காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக Pekan OCPD Supp Mohd Zaidi Mat Zin கூறினார்.

காரின் முன், இடது மற்றும் வலது பகுதிகளில் சேதம் ஏற்பட்டதாகவும், உள்ளே சோதனை செய்ததில், சேற்றில் மூழ்கிய உடல் மற்றும் முஹம்மது இமான் அக்மர் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொழிலாளியின் அடையாள அட்டையும் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here