இன்று கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டால் KLIA, Rapid KL, சேவைகள் பாதிப்பு

கோலாலம்பூர், ஜூலை 27 –

கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள மின்வெட்டால் தங்களது சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) மற்றும் பொது போக்குவரத்து சேவை வழங்குநரான Rapid KL ஆகியன தெரிவித்துள்ளன.

Rapid KL தனது டுவிட்டரில், ‘பெரும் மின் தடையால் அதன் ரயில் சேவைகள், முக்கியமாக LRT ரயில் போக்குவரத்து அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் பாதையில் தடையேற்பட்டது’ என்று பதிவிட்டிருந்தது.

இதற்கிடையில், KLIA தனது பிரதான முனைய கட்டடம் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டால் இதேபோன்ற இடையூறுகளை எதிர்கொள்கிறது என்று கூறியுள்ளது.

இந்த சிக்கலைத் தீர்க்க தேசிய பயன்பாட்டு நிறுவனமான தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) ஐ அணுகியுள்ளதாக இரு கட்சிகளும் தெரிவித்தன.

கிள்ளான் பள்ளத்தாக்கில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here