கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மதங்களை இழிவுபடுத்தாதீர்கள்- பேரரசர்

கோலாலம்பூர், ஜூலை 30 :

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மக்கள் ஒருபோதும் மதங்களை இழிவுபடுத்தவோ, அவமதிக்கவோ அல்லது கேலி செய்யவோ கூடாது என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அறிவுறுத்தினார்.

அனைத்து சமயங்களின் புனிதம் எப்போதும் பாதுகாக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“மதம் என்பது நகைச்சுவையாகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல.

“இவ்வாறான செயல் இனவாதத்தின் தீப்பிழம்புகளை எரித்து, நீண்ட காலமாக அனைத்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின் பிணைப்பை அழித்துவிடும் என்று நான் அஞ்சுகிறேன்,” என்று தேசிய அளவிலான Ma’al Hijrah1444H கொண்டாட்டத்துடன் இணைந்து, இரவு இங்குள்ள கூட்டரசு பிரதேச மசூதியில் நடந்த யாசின் ஓதுதலிலும் அவர் கலந்து கொண்டார்.

அவருடன் பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும் கலந்து கொண்டார்.

மேலும் பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்), செனட்டர் டத்தோ இட்ரிஸ் அகமட் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here