MACC-யால் கைப்பற்றப்பட்ட பிறகு மெனரா இல்ஹாமில் உள்ள நிறுவனங்களின் வணிகம் வழக்கம் போல் உள்ளது

கோலாலம்பூர்:

டந்த திங்கட்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் ஜாலான் பிஞ்சாய் நகரில் உள்ள மெனரா இல்ஹாம் கட்டிடம் கைப்பற்றப்பட்டாலும், அங்குள்ள நிறுவனங்களின் வணிகம் வழக்கம் போல் இயங்கி வருகிறது.

இந்நிலையில் மெனரா இல்ஹாம் கட்டிடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் ஊழியர் கூறும்போது, நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்துவது குறித்து தமது நிறுவனத்திடமிருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று கூறிய அவர், “MACC கைப்பற்றியுள்ளது என அறிந்ததும் நானும் எனது சக ஊழியர்களும் ஆச்சரியமடைந்தோம்” என்று இன்று அங்கு நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கார்ப்பரேட் பிரமுகர் மற்றும் முன்னாள் மூத்த அமைச்சருடன் தொடர்புடைய வழக்கில் RM2.3 பில்லியனுக்கும் அதிகமான அரச நிதியை மோசடி செய்ததாகக் கூறி MACC இந்தக் கட்டடத்தைக் கைப்பற்றப்பட்டதாக முன்னர் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here