வரப்போகும் தேசிய மாதத்தில் நமது ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய மலேசியர்களுக்கு அழைப்பு – டான்ஸ்ரீ அன்னுார் மூசா

புத்ராஜெயா, ஜூலை 30 :

இன்று மலேசியர்களை தேசிய மாதத்துடன் இணைந்துள்ள மலேசியக் குடும்பம் (Keluarga Malaysia) என்ற கருத்திற்கு ஏற்ப, வரவுள்ள தேசிய மாதத்தில் அவர்களின் நன்றியுணர்வு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டான்ஸ்ரீ அன்னுார் மூசா அழைப்பு விடுத்துள்ளார்.

 நாடு கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் உள்ள மக்கள் தேசிய தினம் 2022 மற்றும் மலேசியா தினம் 2022 (HKHM2022) கொண்டாட்டங்கள் மூலம்தங்கள் தேசபக்தி உணர்வை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.

“இந்த ஆண்டு நாடு HKHM2022 ஐக் கொண்டாடும் சூழ்நிலையில், அனைத்துத் தரப்பு மலேசியர்களும் ஜாலூர் ஜெமிலாங்கை அனைத்து இடங்களிலும் பறக்க விடுவதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் கொண்டாடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

“மலேசியக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், இன்று டத்தாரான் புத்ராஜெயாவில் 2022 தேசிய மாதம் மற்றும் ஜலுர் ஜெமிலாங் பறக்கவிடுதல் வெளியீட்டு விழாவில் மேற்கண்டவாறு பேசினார்.

இந்த விழாவை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடங்கி வைத்தார், அவருடன் பல அமைச்சரவை அமைச்சர்களுடம் இணைந்திருந்தனர், அத்துடன் 15,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here