6 வயது ஆட்டிஸம் குழந்தை துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பில் பயிற்றுவிப்பாளரிடம் இன்று வாக்குமூலம் பெறப்படும்

ஜோகூர் பாருவில் ஆறு வயது ஆட்டிஸம் குழந்தையை துன்புறுத்தல் செய்த பயிற்றுவிப்பாளரின் வாக்குமூலங்களை இங்கு போலீசார் பதிவு செய்துள்ளனர். ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமட், இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், குழந்தையின் பயிற்றுவிப்பாளர் மற்றும் பெற்றோர் இருவரிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

குழந்தையில் காணப்படும் காயங்கள் குறித்து நிபுணரிடம் இருந்து மருத்துவ அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். காயங்கள் மற்றவர்களால்  வந்ததா அல்லது சிறுவனால் சொந்தமாக செய்யப்பட்டதா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் விசாரணைக்கு மருத்துவ அறிக்கை முக்கியமானது. விரைவில் அதை பெற எதிர்பார்க்கிறோம். இப்போதைக்கு, சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம் என்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) மரைன் போலீஸ் பிராந்தியம் 2 தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். சமீபத்தில் வைரலாகப் பரவிய குழந்தை துன்புறுத்தல் தொடர்பான மேல் விவரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 29), ஸ்கூடாயில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிப்பாளரால் தனது மகன் துன்புறுத்தல் செய்யப்பட்டதாகக் கூறிய ஒரு பெண்ணின் புகாரை விசாரித்து வருவதாக போலீஸார் உறுதிப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, சிறுவன் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக குலாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா OCPD உதவி ஆணையர் ரூபியா அப்துல் வாஹித் தெரிவித்தார்.

நவம்பர் 2019 இல் தனது மகன் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டதாக அந்தப் பெண் கூறியிருந்தார். மேலும் இந்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி துன்புறுத்தல் நடந்ததாக நம்பப்படுகிறது. அவரது இடது தோளில் கைரேகை காயங்கள் மற்றும் மார்பில் கிள்ளுதல் அடையாளங்கள் இருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here