தளர்த்தப்படும் கோவிட்-19 கட்டுப்பாடுகள் – வெளிநாட்டுப் பயணம் விரைவில் எளிதாகும் என்கிறார் டாக்டர் வீ

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 9 :

கோவிட்-19 பயணக் கட்டுப்பாடுகளை, குறிப்பாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், விரைவில் வெளிநாடுகளுக்கு விடுமுறைக்குச் செல்வது எளிதாகிவிடும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) புத்ராஜெயாவில் நடந்த வருடாந்திர தேசிய விமானப் போக்குவரத்து ஆலோசனைக் குழு (NACC) கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது, போக்குவரத்து அமைச்சர் இதனைக் கூறினார்.

மேலும் இக்கூட்டத்தில் தேசிய விமானத் தொழில் தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றார்.

“எங்கள் அண்டையிலுள்ள கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனாவிற்கான  கோவிட்-19 பயணக் கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்துவதற்கும் மேலும் மீண்டும் இலகுவான பயணங்களை ஆரம்பிப்பதற்கும் தேவையான அனைத்து பங்குதாரர்களையும் தயார்படுத்துவது தொடர்பில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இக்கூட்டத்தில்  விவாதங்கள் நடந்தன.

அத்தோடு “விமான நிலைய மேம்பாடு, பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மறுசீரமைப்பு மற்றும் விமான நிலையங்களுக்கான இணைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான நீண்டகால திட்டங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டன,” என்று டாக்டர் வீ இன்று வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here