சான்றளிக்கப்படாத பல் மருத்துவ சேவைகளை வழங்கும் தகுதியற்ற நபர்களுடன் சுகாதார அமைச்சகம் சமரசம் செய்யாது என்கிறார் கைரி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 :

சான்றளிக்கப்படாத பல் மருத்துவ சேவைகளை வழங்கும் தகுதியற்ற நபர்களுடன் சுகாதார அமைச்சகம் (MOH) சமரசம் செய்யாது என்று அதன் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

சான்றளிக்கப்பட்ட பல் மருத்துவர்கள் இல்லாமல் பல் மருத்துவ சேவைகளை வழங்கும் இடங்கள் தொடர்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, அவ்வாறான இடங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த அமைச்சகம் அமலாக்கத்தை அதிகரிக்கும் என்றார்.

“தகுதியற்ற மற்றும் பதிவு செய்யப்படாது பல் சிகிச்சை வழங்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இந்த விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம், ஏனென்றால் எந்தவொரு பல் சிகிச்சையும் தகுதிவாய்ந்த பல் மருத்துவர்களால் செய்யப்பட வேண்டும், ”என்று அவர் இன்று அழகு மற்றும் சுகாதாரத் திட்ட கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

லேசர் சிகிச்சைகள் உட்பட சில நடைமுறைகளை அழகுக்கலை நிபுணர்களால் நடத்த அனுமதிக்குமாறு அழகுத் துறை சார் அமைப்புகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்துடன் அது தொடர்பான அமர்வு நடத்தப்படும் என்றும் கைரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here