ரோயல் மலேசியன் விமானப்படை மற்றும் இந்திய விமானப்படை இணைத்து கூட்டுப் பயிற்சி

குவாந்தான், ஆகஸ்ட் 13 :

ரோயல் மலேசியன் விமானப்படை (RMAF ) மற்றும் இந்திய விமானப்படை (RMAF ) இணைந்து சக்தி ஏர் எக்ஸர்சைஸ் 2022 (EX US22) என்ற ஆறு நாள் கூட்டுப் பயிற்சியை, நேற்று முதல் குவாந்தான் வான்வெளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி வருகின்றன.

ரோயல் மலேசியன் விமானப்படை இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பயிற்சியின் போது, விமானங்கள் பயிற்சி நோக்கத்திற்காக சில பகுதிகளில்  தாழ்வாகப் பறப்பதைப் பார்த்தால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அது கூறியது.

இந்த கூட்டுப் பயிற்சியின் மூலம், இருநாட்டு பாதுகாப்பு, ஒத்துழைப்பை அதிகரிக்கவும், சிறந்த நடைமுறைகளை அதன் சிறந்த நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் இரு நாட்டு விமானப்படைகளும் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here