(ராமேஸ்வரி ராஜா – எஸ். சண்முகம்)
கோலாலம்பூர்:
உற்பத்தி, புத்தாக்கம், சந்தை விரிவாக்கம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு குறு, சிறு, நடுத்தர தொழில்துறை (PMKS) கார்னிவெலை ஏற்பாடு ஙெ்ய்வதன்வழி அத்துறைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் (HASiL) வலுப்படுத்துகிறது.
2026 ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் HASiL 30ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் கார்னிவெலை துணை நிதி அமைச்ங்ர் லியூ சின் தோங் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் HASiL தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின், நிதி அமைச்சின் வரிப்பிரிவுச் ஙெ்யலாளரும் வாரியத்தின் ஓர் உறுப்பினருமான டத்தோ ஜோன் பெட்ரிக் அந்தோணிசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த PMKS கார்னிவெல் ஏற்பாடானது குறு, சிறு, நடுத்தர தொழில்துறைகளை 20க்கும் அதிகமான அரசாங்க ஏஜென்சிகள், இணை நிறுவனங்கள், தனியார் துறைகள், நிதிக் கழகங்கள் ஆகியவற்றுடன் தொடர்புப்படுத்தும் ஓரிட முகப்பிடமாகத் திகழ்ந்தது. இதன்வழி இத்துறைகளை டிஜிட்டல்மயமாக்கி அவர்களின் வர்த்தகத் திறன்களை உயர்த்துவதற்கும் புதிய ங்ந்தைகளைக் கண்டறிவதற்கும் கடன் திட்டங்களைப் பெறுவதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

கார்னிவெலை தொடங்கிவைத்து உரையாற்றிய லியூ சின் தோங், PMKS என்பது பொருளாதாரத்திற்கு மட்டும் பங்களிக்கும் ஒரு களமல்ல. ஆனால் பொருளாதாரத்துறையில் ஒரு முதுகெலும்பாக இத்துறை விளங்குகிறது. இந்நிலையில் நவீன பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான போட்டித்தன்மையை வழங்கக்கூடிய ஒன்றாக PMKS திகழ்வதை உறுதி செய்வதற்கு இ-இன்வாய்ஸ் போன்று அத்துறையை டிஜிட்டல்மயமாக்குவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்றார்.
தேசிய அளவில் இ-இன்வாய்ஸ் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக பயிற்சி, ஆலோசனைச் சேவைகள் உட்பட ஒட்டுமொத்த PMKS துறைகளுக்கு வலுவான ஆதரவை வழங்குவதற்கு இந்தக் கார்னிவெல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நிலையற்ற பொருளாதாரச் சூழலில் இ-இன்வாய்ஸ் பயனீடானது ரொக்கத்தை இன்னும் திறம்பட நிர்வகிப்பதற்கும் நிதி நிலையை இன்னும் சிறந்த முறையில் கண்காணிப்பதற்கும் தொழில்திறனை விரைந்து மேலும் துல்லியமான முடிவுகள் எடுத்துச் ஙெ்யல்படுத்துவதற்கும் இ-இன்வாய்ஸ் பயனீடு ஒரு சிறந்த முறையாக இருக்கிறது என்று துணை அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கார்னிவெல் பல்வேறு துறைகளைச் ஙே்ர்ந்த 30க்கும் அதிகமான தொழில்முனைவோரை அழைத்து HASiL-இன் பிரதான முகவர்களாக நேரடியாக Portal MyInvois dan MyInvois e-POS போன்றவற்றைப் பயன்படுத்தி PMKS மத்தியில் இ-இன்வாய்ஸ் பயனீட்டைப் பிரபலப்படுத்துவது குறித்த தகவல்களைப் பகிர்ந்தனர்.
இ-இன்வாய்ஸ் அமலாக்கம் குறித்து ஆலோங்னைச் சேவைகளை கீழ்க்குறிப்பிட்டவாறு HASiL தயாராக வைத்துள்ளது.
1. HASiL அலுவலகத்திற்கு நேரில் வருகை
2. 03-86828000 (24 மணி நேரம்) என்ற எண்ணில் இ- இன்வாய்ஸ் முகப்பிடத்தில் உதவிகளை நாடலாம்.
3. MyInvois நேரடிக் கலந்துரையாடல்
4. e-mel [email protected] எனும் மின்னஞ்ங்ல் முகவரியில் இ-இன்வாய்ஸ் பற்றிய பொது தகவல்களைப் பெறலாம்.
5. MyInvois வாடிக்கையாளர்களின் கருத்துப் பரிமாற்றப் பாரங்களுக்கு https://feedback.myinvois.hasil.gov.my. என்ற வலைத்தளத்தில் வலம் வரலாம்.
நிதி அமைச்சகத்தின் துணை அமைச்சர் லியூ சின் டாங் தொடங்கி வைத்த இந்த விழாவில் பேசிய வருமான வரி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுதீன், “மின்-விலைப்பட்டியல் முறையின் இறுதிக்கட்டமான, 5 மில்லியன் ரிங்கிட் வரை வருமானம் கொண்ட வணிகங்களுக்குப் போதிய தெளிவையும் வழிகாட்டல்களையும் வழங்கவே இக்கண்காட்சி பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
























