உயர்கல்விக் கூடங்களில் ருக்குன் நெகாரா செயலகம் தோற்றுவிப்பு ஒற்றுமைத்துறை அமைச்சர் பேச்சு

* மாணவர்களின் திறமையையும் சிந்தனையையும் மேம்படுத்தும் ஒருமைப்பாட்டு விவாதப் போட்டி

ஜோகூர் பாரு,
நாடு தழுவிய நிலையில் உள்ள அனைத்து நிலையிலான உயர்கல்விக் கூடங்களிலும் ருக்குன் நெகாரா ஙெ்யலகத் தோற்றுவிப்பினை தேசிய ஒற்றுமைத்துறை அமைசசு விரிவாக்கம் செய்யும் என தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சாடிக் கருத்துரைத்தார்.


ஸ்கூடாய் தொழில்நுட்பக் பல்கலைக்கழத்தில் (யூடிஎம்) நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் கிண்ண மலேசிய குடும்ப ஒருமைப்பாட்டு விவாதப் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
உயர்கல்வி மாணவர்கள் ஒருமைப்பாட்டுத் தூதர்களாக உருமாறச் ஙெ்ய்யும் அமைச்சின் எதிர்பார்ப்புகளுள் ஒன்றாக இந்த உயர்கல்விக் கூடங்களில் ருக்குன் நெகாரா செயலகம் தோற்றுவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகங்கள் பல்வேறு இன, மதங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டுள்ளன என்பதை நாம் அறிகின்றோம். எனவே தேசிய ஒருமைப்பாட்டுக் கொள்கையில் எதிர்பார்ப்பதை நிறைவேற்றும் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட இடமாக பல்கலைக்கழகங்களை எளிதாக உருமாற்ற முடியும்.
உயர்கல்விக் கூடங்களில் உள்ள இந்த ருக்குன் நெகாரா செயலகத்திற்கு உயர்கல்வி அமைச்சின் ஆதரவோடு ஒரு பகுதி செயல் மானியம் வழங்கப்படுகிறது. வருங்காலங்களில் இந்த மானியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் கிண்ண மலேசியக் குடும்ப ஒருமைப்பாட்டு விவாதப் போட்டியானது உயர்கல்விக்கூட மாணவர்களின் திறமைகளை வளரச் செய்து, அவர்களின் சிந்தனையை முழுமையாக வடிவமைக்க்கூடிய வல்லமையைக் கொண்டுள்ளது.
இந்த விவாதப் போட்டி மலேசியக் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள மதம், கலாச்சாரம், பழக்கவழக்கங்களின் பன்முகத்தன்மையைத் தெளிவாக வெளிக்காட்டி உயர்க்கல்வி மாணவர்கள் மத்தியில் இந்த அம்சங்கள் குறித்த புரிந்துணர்வை மேலோங்கச் செய்கின்றது.
இந்தப் போட்டி தொடர்ந்து நடத்தப்படுவதுதான் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் நோக்கமும்கூட என்றார் அவர்.
மேலும், இந்த விவாதப் போட்டியானது நேர்மறையான பொது் விவாத கலாச்சாரத்தையும் ஊக்குவிப்பதற்கும் நடத்தப்படுகின்றது. எனவே, உயர்க்கல்விக்கூட மாணவர்கள் இதுபோன்ற தேசிய நிகழ்ச்சிகளில் அதிக ஈடுபாட்டோடு பங்கேற்க வேண்டும் எனவும் ஒற்றுமைத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்த விவாதப் போட்டி, பல இன மக்கள் மகிழ்ச்சி – துக்கம் என அனைத்திலும் ஒற்றுமையாக ஒருமைப்பாட்டினைக் கடைப்பிடித்து வாழும் ’மலேசியக் குடும்பம் ஒன்றிணைந்து வலிமை பெறும் என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
எனவே, மலேசியக் குடும்ப அபிலாஷைக்கு ஏற்ப ஒருமைப்பாட்டு அம்சத்தைக் குறிப்பாக உயர்க்கல்விக்கூட மாணவர்கள் மத்தியில் வலுப்படுத்த இளைய தலைமுறையினரின் பங்களிப்பு அவசியமாகிறது எனவும் டத்தோ ஹலிமா சுட்டிக்காட்டினார்.
இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு ஆதரவு வழங்குவதோடு எப்பொழுதும் துணை நிற்கும். இம்முறை போட்டியில் நாடு தழுவிய அளவில் உள்ள உயர்க்கல்விக் கூடங்களைச் சேர்ந்த 30 அணிகளில் மொத்தமாக 120 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர் எனக் குறிப்பிட்டு ஆதரவு வழங்கிய டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா , செல்கோம் அக்ஸியாத்தா நிறுவனம், தெனாகா நேஷனல் பெர்ஹாட் எனர்ஜி செர்வீஸ் குழுமம் ஆகிய தரப்பினருக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


இந்த விவாதப் போட்டியில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ இண்டரா நோரிடா, யூடிஎம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அமாட் ஃபௌசி பின் இஸ்மாயில், டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா தலைமை இயக்குநர் (DSP) பேராசிரியர் டத்தோ அபாங் சாலாஹுடின் ஷோகரன், டாக்டர் ஷம்சுல் பின் ஷாஹிபுடின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த விவாதப் போட்டியில் மலாயா பல்கலைக்கழகம் (யுஎம்) முதல் பரிசை தட்டிச் சென்றது. அப்பல்கலைக்கழக மாணவர்கள் முகமட் நட்ஜவான், அயிஷா சல்சபீலா, முகமட் அமிருல், அலி ஹைடர் ஆகியோர் ருக்குன் நெகாரா (எஸ்ஆர்என்) செயலகத்தின் 1௦,௦௦௦ ரிங்கிட் செயல் மானியம், 2௦,௦௦௦ ரிங்கிட், கிண்ணம், சான்றிதழகளை வென்றனர்.


மலேசியாவின் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்களான (UIAM) நூருல் ஹன்னன் படரியா அப்துல் முத்தலிப் முகமது ஸாரிஃப், சைடா நஃபிசா உமார், முகம்மது அகில் முஜாஹித் முக்தார் ஆகியோர் இரண்டாம் நிலை பரிசைப் பெற்றனர்.
அவர்களுக்கும் ருக்குன் நெகாரா (எஸ்ஆர்என்) செயலகத்தின் 1௦,௦௦௦ ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது. இதுதவிர 3,௦௦௦ ரிங்கிட், கிண்ணம் – சான்றிதழ்களும் அவர்கள் பெற்றனர்.
அதோடு சிறந்த பேச்சாளராக (இறுதிச்சுற்று) முகமது நஜ்வான் எனும் மாணவர் தேர்வாகி 1,௦௦௦ ரிங்கிட் ரொக்கமும் கிண்ணமும் சான்றிதழும் வென்றார்.

இதற்கிடையே முன்னதாக இந்தப் போட்டியின் முதல் சுற்று ஆகஸ்டு 6, 7ஆம் தேதிகளில் மெய் நிகர் முறையில் ஒற்றுமைத்துறை அமைச்சின் யூடியூப் பக்கதிலும் தேசிய ஒற்றுமை – ஒருமைப்பாட்டு இலாகாவின் சமூக வலைத் தள பக்கங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
தொடர்ந்து காலிறுதி, அரையிறுதி சுற்று போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை யுடிஎம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த அரையிறுதிச் சுற்றில் சபா மலேசியப் பல்கலைக்கழகம், மலேசிய ஐபிஜி, அனைத்துலக மொழி வளாக ஐபிஜி, மலாயாப் பல்கலைக்கழகம், மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் என ஐந்து உயர்கல்விக்கூடங்கள் விவாதம் நடத்தின.
இதனையடுத்து இறுதிச் சுற்று சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் மொத்தமாக சிறந்த விவாதப் படைப்பாளராக நூர்ஹனி ஸுல்கிப்ளி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 1,௦௦௦ ரிங்கிட் ரொக்கத் தொகை, கிண்ணம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here