முன்னாள் உடற்கட்டழகர் சாம்பியனான கன் பூன் லியோங் காலமானார்

மலாக்கா, ஆகஸ்ட் 15 :

மலேசியாவின் “உடல் கட்டமைப்பின் தந்தை” என்று அழைக்கப்படுவரும் முன்னாள் மலாக்கா MCA தலைவருமான டத்தோ கான் பூன் லியோங் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவரது 84 ஆவது வயதில் காலமானார்.

இத்தகவலை அவரது மகன் கான் தியான் லூ உறுதிப்படுத்தினார், தனது தந்தை இதய நோய்காரணமாக இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஆனால் நேற்று நண்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

“அவர் இங்குள்ள ஒரு பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று அதிகாலையில் காலமானார்” என்றார்.

“அவரது உடல் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜாலான் ஜோங்கரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரது நல்லுடல் ஜோகூரில் உள்ள பெக்கோக், தாங்காக்கில் இன்று அடக்கம் செய்யப்படும் ” என்று தியான் லூ பெர்னாமாவிடம் தெரிவித்திருந்தார்.

கேன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், மலேசிய பளுதூக்குதல் கூட்டமைப்பின் தலைவராகவும், ஆசிய உடற்கட்டமைப்பு கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திறமையான உடற்கட்டழகர் ஆவார்.

மேலும் இவர் குத்துச்சண்டை மற்றும் டேக்வாண்டோ சங்கங்களிலும், குறிப்பாக மலாக்காவில் அவர் தீவிரமாக செயற்பட்டார் .

ஆகஸ்ட் 25, 1937 இல் பிறந்த பூன் லியோங்கிற்கு, டேடின் சோங் கின் யோக் என்ற மனைவியும் ஏழு குழந்தைகளும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here