30 ஆண்டுகள் சிறையில் இருந்த முன்னாள் குற்றவாளி மாரடைப்பால் மரணம்

30 ஆண்டுகளாக சிறையில் இருந்த முன்னாள் குற்றவாளி இன்று கெடாவின் கோலா நெராங்கில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

71 வயதான ஜமில் அஹ்மத், இன்று  காலை அவரது வீட்டிற்கு வெளியே மயங்கிய நிலையில் கிடந்ததை அவரது வீட்டுத் தோழி கண்டுபிடித்தார் என்று கோஸ்மோ தெரிவித்துள்ளது.

படாங் டெராப் காவல்துறைத் தலைவர் முல்கியாமன் மன்சோர் அவரின் இறப்பில் குற்றச் செயல் இருப்பதை நிராகரித்தார். ஜமீல் மாரடைப்பால் இறந்தார் என்று கூறினார். கடந்த வாரம் முதல் ஜெமீல் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவர் கூறினார்.

அவர் கழிவறைக்குச் செல்லும் வழியில் விழுந்தார் என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறியதாக நாளிதழ் கூறியது. 1976 ஆம் ஆண்டு கெடாவின் பாலிங்கில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதற்காக ஜமிலுக்கு 30 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கெடா சுல்தானால் மன்னிக்கப்பட்ட பின்னர் அவர் அக்டோபர் 2006 இல் விடுவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here