ஓராங் அஸ்லி சமூகத்தை மேம்படுத்த ஜோகூர் மாநில அரசு உறுதி

இஸ்கண்டார் புத்திரி:

ராங் அஸ்லி சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஜோகூர் மாநில அரசு கடந்த ஆண்டு RM9,720,344.70 ஒதுக்கீடு செய்துள்ளது, இது அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மாநில அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திஇருக்கிறது என்று, விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஜஹாரி சரிப் (BN-Buloh Kasap) கூறினார்.

இந்த மொத்த நிதியில் மத்திய அரசிடமிருந்து RM9,268,344.70 மற்றும் மாநில அரசிடமிருந்து RM452,000 என்பன அடங்கும். இது உள்கட்டமைப்பு, சமூக வசதிகள் மேம்பாட்டு, நிலையான நீர் வழங்கல், பொருளாதார வலுவூட்டல், கிராம மட்டத்தில் நிர்வாக நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகிய திட்டங்களுக்கான மேம்பாடுகளை உள்ளடக்கியுள்ளது என்றார் அவர்.

மேலும், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கிடையேயான கூட்டு அர்ப்பணிப்பு, இந்த மேம்பாட்டு முயற்சிகள், ஓராங் அஸ்லி சமூகம் ஜோகூரின் வளர்ச்சிப் பாதையில் போட்டியிட்டு முன்னேறுவதை உறுதி செய்வதாகும் என்றார்.

இன்று, கோத்தா இஸ்கண்டாரில் உள்ள பங்குனான் சுல்தான் இஸ்மாயிலில் நடைபெற்ற 15வது ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் போது, ஒராங் அஸ்லி மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகள் குறித்த துவான் டான் சோங் (BN-Bekok) கேள்விக்கு ஜஹாரி இவ்வாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here