ஜாலான் கிள்ளான் லாமா சொகுசுமாடிக் குடியிருப்பில் இயங்கிவந்த அழைப்பு மையத்தில் போலீசார் சோதனை- 6 பேர் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 :

ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இயங்கிவந்த அழைப்பு மையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திங்கட்கிழமை நடந்த சோதனையில் கைது செய்யப்பட்ட இரண்டு உள்ளூர் ஆண்கள், இரண்டு உள்ளூர் பெண்கள் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 20 முதல் 31 வயதுடைய ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்று பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து 6 மடிக்கணினிகள், 12 மொபைல் போன்கள் மற்றும் 10 சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்துள்ளோம் என்று செவ்வாய்க்கிழமை (ஆக. 16) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் இருந்து Shopee இணைய சந்தை மூலமாக பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து கடந்த மாதம் முதல் இந்தக் கும்பல் செயல்பட்டு வருவது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

“இந்த மோசடிக்காக இணையத்தினை ப்ரீபெய்ட் இணையத் திட்டங்களைப் பயன்படுத்துவைத்தான் மூலம் பெற்றுக்கொண்டனர்.

“சந்தேக நபர்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒருவரையொருவர் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் கால் சென்டரில் வேலை வழங்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

சந்தேக நபர்களுக்கு மாதம் ரம் RM3,000 முதல் RM3,500 வரை ஊதியம் வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு வெற்றிகரமான பணிக்கும் சுமார் 5% கமிஷன் வழங்கப்படும் என ஏசிபி அமிஹிசாம் கூறினார்.

“லாபமான ஊதியத்தை உறுதியளிக்கும் இதுபோன்ற மோசடியான வேலை வாய்ப்புகளால் எளிதில் ஏமாற வேண்டாம் என்று நாங்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

“ஒரு முடிவை எடுப்பதற்கு முன் எந்த வேலை வாய்ப்பையும் சரிபார்க்கவும்,” என்று அவர் கூறினார்.

மோசடிகள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் CCID மோசடி பதில் மையத்தை 03-2610 1559 அல்லது 03-2610 1599 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here