கைதுசெய்தபோது போலீஸ்காரரின் கையை கடித்து, போதைப்பித்தர் தப்பிக்க முயற்சி

தாங்காக், ஆகஸ்ட் 18 :

இங்கு அருகே உள்ள புக்கிட் கம்பீரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், நேற்று பிரச்னையை ஏற்படுத்திய போதைப்பித்தரை கைது செய்தபோது, போலீஸ்காரர் ஒருவரின் வலது கையில் கடித்து காயத்தினை ஏற்படுத்தினார்.

தாங்காக் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஃபாதில் மின்ஹாட் கூறுகையில், நண்பகல் 1.00 மணியளவில் 33 வயதுடைய நபரை போலீசார் கைது செய்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

“சந்தேக நபர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்ட போது, ​​சந்தேக நபர் போலீஸ்காரரின் கையை கடித்து தப்பிக்க முயன்றார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் சிறுநீர் பரிசோதனையின் முடிவில், அவர் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (கேபிஜே) பிரிவு 117 இன் படி விளக்கமறியலில் வைக்கும் உத்தரவைப் பெறுவதற்காக, சந்தேக நபர் இன்று தாங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 332 மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 353 இன் படி வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதற்காகவும், அரசு ஊழியர்களை தங்கள் கடமைகளை செய்ய விடாமல் மிரட்டுவதற்கு பலத்தை பயன்படுத்தியதற்காகவும் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது என்றார்.

“இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here