செம்பனம்பழம் பதப்படுத்தும் இயந்திரத்தில் சிக்கி உள்ளூர் ஆடவர் மரணம்

சிகாமாட், ஆகஸ்ட் 22 :

இங்குள்ள ஜாலான் ஜெனுவாங்கில் உள்ள பனம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கன்வேயர் பிரையர் இயந்திரத்தில் சிக்கி தொழிற்சாலை ஊழியர் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ஜோகூர் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து பிற்பகல் 3.18 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், சிகாமட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு அந்த இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.

“இடத்திற்கு வந்தபோது, ​​​​பாதிக்கப்பட்டவரின் உடலின் ஒரு பகுதி, இயந்திரத்தில் சிக்கியிருந்தது. உயிரிழந்தவர் 57 வயதுடைய கான் கியான் பெங் என அடையாளம் காணப்பட்டார்.

உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

“அவரது உடலை இயந்திரத்திலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளுக்கு சுமார் 30 நிமிடங்கள் எடுத்தன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பிற்பகல் 3.48 மணியளவில் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here