இன்னும் எத்தனை காலம் நாங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இல்லாமல் அவதிப்படுவது? MAHAS தலைவர் A.K.செல்வன் வேதனை

மலேசிய முடிதிருத்துவோர் உரிமையாளர்கள் சங்கத்தின் (MAHAS) 2ஆம் ஆண்டு பொதுக்கூட்ட  கோலாலம்பூர் சீன மண்டபத்தில் நடைபெற்றது.  இதில் கோலாலம்பூர், கெடா, பினாங்கு, சிலாங்கூர்  மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 50 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  ஆண்டுக்கூட்டத்தை KLSICCI துணைத் தலைவர் வி.கே.கே. ராஜசேகர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய MAHAS தலைவர் A.K.செல்வன் எங்கள் முடிதிருத்தும் தொழிலுக்கு  உள்ளூர்வாசிகள் மற்றவர்களுக்காக வேலை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் முடிதிருத்தும் தொழிலை கற்றுக்கொண்டவுடன் உரிமையாளராக இருக்க விரும்புகிறார்கள்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் முடக்கப்பட்டதால், பல வணிக உரிமையாளர்கள் தங்கள் வணிகத்தை மூடிவிட்டனர். தொடந்து இதனை நடக்க நாம் அனுமதிக்க முடியாது. அதனால்தான், அரசாங்கத்தை முழுமையாகச் சார்ந்திருப்பதை விட, எங்கள் வணிக உரிமையாளர்களுக்கு உதவ, கோப்ரசி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கோப்பராசி வழி 10 புதிய முடிதிருத்தும் கடை மற்றும் பயிற்சி, சலூன் பயிற்சி மையத்தை திறக்க RM1 மில்லியனை திரட்ட திட்டமிட்டுள்ளது. இது சலூன் வியாபாரத்தில் இளம் தொழில் முனைவோரை உருவாக்குகிறது. நிகழ்ச்சிகள் மற்றும் கோப்பராசி நடவடிக்கைகளுக்கு வசதியாக KL நகரில் சொந்தமாக ஒரு கட்டிடம் அமைக்கவும் கோப்பராசி திட்டமிட்டுள்ளது.

உறுப்பினர்கள் தங்கள்  வணிகத்திற்காக அவர்களை வேலைக்கு அமர்த்தலாம். இது உள்ளூர் சலூன் உரிமையாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக MAHAS மற்றும் KOPSAL நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு கூட்டு வணிகமாகும். சங்கம் மற்றும் கூட்டுறவு நாடு முழுவதும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. உறுப்பினராக சேர ஆர்வமுள்ள முடிதிருத்தும் உரிமையாளர்கள் தலைவர் A.K.செல்வன் 011-62635335 ஐ தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here