வனவிலங்குகளை வேட்டையாடிய மூவர் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 :

கடந்த ஞாயிற்றுக்கிழமை பகாங்கின் பெராவைச் சுற்றியுள்ள செம்பனை தோட்டப் பகுதியில், வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் கூறுகையில், 35 முதல் 50 வயதுக்குட்பட்ட மூவரும் பொது செயல்பாட்டுக் குழு மற்றும் தீபகற்ப மலேசியாவின் வனத்துறையின் ஒத்துழைப்புடன், மாலை 3 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட “ஆபரேஷன் பெர்செபாடு கசானா (OBK) நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனர்.

“கைது செய்யப்பட்டதில், அனுமதிக்கப்பட்ட சரியான ஆவணங்கள் ஏதுமின்றி வேட்டையாடப்பட்டு, சந்தேக நபர்களால் வைக்கப்பட்டிருந்த செரிண்டிட் பறவை இனங்கள் மற்றும் காட்டுக்கோழி மற்றும் அந்துப்பூச்சி என்பவற்றுடன் வனவிலங்குகளின் உடல் பாகங்களையும் (இறைச்சி) நாங்கள் பறிமுதல் செய்தோம்.

மேலும் “வன விலங்குகளை வேட்டையாட அவர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கட்டுத்துப்பாக்கிகளையும் நாங்கள் பறிமுதல் செய்தோம்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 716) மற்றும் துப்பாக்கிச் சட்டம் 1960 (சட்டம் 206) ஆகியவற்றின் கீழ் சந்தேகத்திற்குரிய மூவரும் மேலதிக விசாரணைக்காக ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“சட்டவிரோத வேட்டைக்காரர்களின் செயல்பாடுகள் மற்றும் சட்டவிரோத பொறிகளை நிறுவுதல் ஆகியவற்றை பெர்ஹிலிடன் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here