செம்பனைத் தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு

டுங்கூன், ஆகஸ்ட் 30 :

இங்கு அருகே உள்ள ஃபெல்டா கெர்தே 6ல் உள்ள செம்பனைத் தோட்டத்தில், நேற்று மாலை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

நேற்று மாலை 6.50 மணியளவில் இரத்த வெள்ளத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக, 60 வயதான பண்ணை மேலாளரால் தமது தரப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக டுங்கூன் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் பஹாருதீன் அப்துல்லா தெரிவித்தார்.

“பண்ணையின் மேலாளர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சடலத்தைக் கண்டதாகவும், பின்னர் கெத்தேங்கா ஜெயா காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டார்,” என்று அவர் சம்பவம் நடந்த இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

புகாரை பெற்ற போலீசார் பண்ணைப் பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் என்று பஹாருதீன் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் 42 வயதான உள்ளூர்வாசி என்றும் விசாரணை இன்னும் நடந்து வருகிறது, இதுவரை சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோல திரெங்கானு சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் படி விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here