இந்த ஆண்டு 9.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அடைய இலக்கு – சுற்றுலா அமைச்சர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30:

இந்த ஆண்டு 9.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் வர வைப்பதற்கான புதிய இலக்கை சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் (Motac) நிர்ணயித்துள்ளது. இவ்வாறு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் சுற்றுலாத் துறை மூலமான வருமானம் 26.8 பில்லியன் வருமானம் கிடைக்கும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில், 3.21 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர், அவர்களிடமிருந்து நாட்டுக்கு RM9.35 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாகவும், இது இந்த ஆண்டு சுற்றுலாத் துறை நிர்ணயித்த 4.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை என்ற இலக்கை ஏறக்குறைய எட்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

“எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து மற்றும் உள்வரும் பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது உட்பட, வணிக நிகழ்வுகள் மூலம் சர்வதேச பிரதிநிதிகளை நம் நாட்டிற்கு அழைத்து வருவது போன்ற தீவிரமான முன்முயற்சிகள் மற்றும் ஊக்கங்களால் மட்டுமே இது சாத்தியமாகிறது,” என்று அவர் கூறினார்.

நேற்று மலேசியா @ மலேசியா வணிக நிகழ்வுகள் வாரம் 2022 இல் நடந்த 7வது சந்திப்பில் பேசிய நான்சி, மற்ற சுற்றுலாப் பிரிவுகளைப் போலவே, வணிக நிகழ்வுகளும் விருந்தோம்பல் தொடர்பான நிறுவனங்களுக்கு வணிகத்தைத் தூண்டுவதை மறுக்கமுடியாது என்றார்.

ஆய்வுகளின் அடிப்படையில், வணிக நிகழ்வுக்காக வரும் அனைத்துலக பேராளர்கள் சராசரி சுற்றுலாப் பயணிகளை விட மூன்று மடங்கு அதிகமாக செலவழிக்கிறார்கள் என்றும் அவர்களில் 40 சதவீதம் பேர் வாழ்க்கைத் துணைகளுடன் பயணம் செய்கிறார்கள், அவர்களில் 60 சதவீதம் பேர் பின்னர் சுற்றுலாப் பயணிகளாகத் திரும்புகிறார்கள்,” என்று அவர் வெளிப்படுத்தினார்.

எனவே, “வணிக நிகழ்வுகளை மறுவடிவமைத்தல்” என்ற கருப்பொருளுடன் நான்சி கூறுகையில், Motac வணிக நிகழ்வுகளின் இலக்காக கொண்டு மலேசியாவின் மதிப்பை வலுப்படுத்துவதில் தமது துறை கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here