அலோர் ஸ்டார், செப்டம்பர் 2 :
கெடாவில் ஏழு வெள்ள மீட்சி திட்டங்களுக்காக அரசாங்கத்தின் 12வது மலேசியத் திட்டத்தின் (12MP) கீழ் RM1.3 பில்லியனை ஒதுக்கியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
அத் திட்டங்களில் சுங்கை பெண்டாங், கெடா ஆறு/அனாக் புக்கிட்; பாலிங், கோலா பெகாங் மற்றும் பண்டார் ஜித்ரா செலாத்தான் ஆகியவை அடங்கும்.
இன்று இங்குள்ள தாருல் அமான் ஸ்டேடியத்தில் மலேசிய குடும்பத்தின் அபிலாசைகள் சுற்றுப்பயணத்தில் (Keluarga Malaysia – AKM ) கெடா பகுதியைத் திறந்து வைத்து பேசிய அவர், “கெடா முழுவதும் 28 பொது கழிவுநீர் ஆலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான வளாகங்களில் 16 கழிவுநீர் ஆலைகள் உட்பட மொத்தம் RM239 மில்லியன் வரை ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சானுசி முஹமட் நோர் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் டத்தோஸ்ரீ மஹ்ட்சிர் காலிட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மலேசிய குடும்பத்தின் அபிலாசைகள் சுற்றுப்பயணத்தில் ஜோகூர், பெர்லிஸ், சபா, திரெங்கானு, பேராக், கிளாந்தான், சரவாக் மற்றும் சிலாங்கூர் ஆகிய இடங்களுக்குப் பிறகு ஒன்பதாவது இடம் கெடா ஆகும்.