பதின்ம வயதினர் பாதிப்பு யார் காரணம்?

கொரோனா பாதிப்பிலிருந்து பதின்ம வயதினரைப் பாதுகாப்பது பெற்றோர்கள் கையில் இருக்கிறது. பெற்றோர்கள் இவ்விஷயத்தில் இன்னும் அஜாக்கிறதையாகவே இருக்கிறார்கள் என்று சாடுவது பொருத்தமாக இருக்குமோ?

குழந்தைகளை எங்கு அழைத்துச் செல்லலாம். எங்கு அழைத்துச்செல்லக் கூடாது என்பது 60 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்டுவரும் வாய்ப்பாடாக இருக்கிறது. ஆனாலும் பல பெற்றோர்களின் காதில் இது விழந்திருப்பதாக அறிகுறியே இல்லை.

அதனால்தான் இவ்விஷயத்தில் சிலாங்கூர் 77 என முன்னணியில் இருக்கிறது. இது, கேளாண்மையைக் குறிக்கும் செய்தியாகும் . இதைச் சுலபமாக செவிட்டுத் தன்மை பட்டியலில் இடம்பெறச்செய்லாம்.

அடுத்து நெகிரிசெம்பிலான் 48, ஜோகூர் 46, கோலாலம்பூர் , புத்ரா ஜெயா 28 என்ற எண்ணிக்கை என்பது மிகக்கூடுதலாகும்.  ஒன்று, இரண்டு என்பதாகவும் இருந்திருக்கக்கூடாது. குழந்தைகள் விஷயத்தில் கவனமின்மை அதிகமாகவே இருக்கிறது என்பதுதானே இதன் பொருள்.

குழந்தைகளுக்குத் தொற்று என்றால் அது அக்குடும்பத்தின் ஒட்டுமொத்த நலனையும் பாதுப்புக்குள்ளாக்கிவிடும் என்பது சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ நோர் இஷாம் மிகக் கவனமாக இருக்கிறார். ஆனால் மக்கள் கவனமில்லாமல் இருப்பதால் விளைவுகள் மோசமடைந்திருக்கின்றன.

மக்கள் நடாமாட்ட கூடல் இடைவெளி முக்கியமானது என்றால் யாருக்கு?

நாட்டுக்கா மக்களுக்கா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here