மலேசியாவில் தாயாரிக்கப்பட்ட “சோயா கிச்சாப்பை ” சந்தையிலிருந்து மீட்டுக்கொண்டது சிங்கப்பூர்

சிங்கப்பூர், செப்டம்பர் 3 :

மலேசியாவில் தாயாரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் “சோயா கிச்சாப்பில்’ சிங்கப்பூரின் உணவு ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சாஸ்களுக்கான அமில கட்டுப்பட்டு வரம்பை விட அதிகமான பென்சாயிக் அமிலத்தைக் கண்டறிந்ததை அடுத்து, அத்தயாரிப்பை சந்தையிலிருந்து சிங்கப்பூர் திரும்பப் பெற்றுள்ளது.

சிங்கப்பூர் உணவு முகமை (SFA) நிறுவனத்தின் கூற்றுப்படி, Hand Flower Brand “சோயா கிச்சாப்பில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பென்சாயிக் அமிலம் இருப்பதாகவும் அத்தோடு பென்சாயிக் அமிலத்தின் பயன்பாடு குறித்து அத்தயாரிப்புகளின் உணவு பேக்கேஜிங் லேபிளில் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்த்துள்ளது.

இந்த “சோயா கிச்சாப் ” அதிக அளவில் உட்கொள்ளும் முக்கிய உணவாக இல்லாததால், இந்த தயாரிப்பை ஒருமுறை சாப்பிடுவது பொதுமக்களுக்கு பாதிப்பாக இருக்க வாய்ப்பில்லை, ஆனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த தயாரிப்பினை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் இறக்குமதியாளரான ஹெங் யூன் டிரேடிங் பிரைவேட் லிமிடெட்டுக்கு, சம்பந்தப்பட்ட தயாரிப்பை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளதாக, நேற்று வெள்ளிக்கிழமை (செப்.2) சிங்கப்பூர் உணவு முகமை நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியது.

சிங்கப்பூர் உணவு ஒழுங்குமுறைகளின் கீழ், அனுமதிக்கப்பட்ட உணவுச் சேர்க்கைகள் மட்டுமே உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று SFA கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here