மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவராக ஹஸ்னி நியமனம்

ஜோகூர் பாரு, செப்டம்பர் 5 :

முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹஸ்னி முகமட் மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோகூர் அம்னோ தலைவரும் உச்ச மன்ற உறுப்பினருமான டத்தோ அப்துல் ரஷித் ஆசாரிக்கு பதிலாக நியமிக்கப்பட்டனர்.

பேனுட் சட்டமன்ற உறுப்பினரான ஹஸ்னி, பொறியியல் பின்னணி கொண்டவர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) அவர் வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில், கூட்டாட்சி மட்டத்தில் தனக்கு ஒரு புதிய கடமை இருப்பதாக ஹஸ்னி கூறினார்.

“கடவுள் நாடினால், மலேசியாவுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். எந்த நேரத்திலும் தேசத்திற்குப் பங்காற்ற நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளத்தின்படி, ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வந்த ஹஸ்னியின் நியமனம் ஆகஸ்ட் 14, 2024 வரை அமலில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here