சீனாவிற்கு திரும்பும் மலேசிய மாணவர்களுக்கு விமானங்களை ஒருங்கிணைக்கிறது வெளியுறவு அமைச்சகம்

கோலாலம்பூர், செப்டம்பர் 8 :

சீனாவில் படிப்பைத் தொடரும் மலேசிய மாணவர்களின் பயணங்களை வெளியுறவு அமைச்சகம் ஒருங்கிணைத்து ஷாங்காய்க்கு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது.

கோலாலம்பூரில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்துடன் (PRC) இணைந்து வெளியுறவு அமைச்சகத்தின் ஒத்துழைப்பின் மூலம், 450 மலேசிய மாணவர்கள் ஆகஸ்ட் 8 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை சீனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

“தங்கள் படிப்புக்காக சீனாவுக்குத் திரும்ப விரும்பும் அனைத்து மாணவர்களும் அந்தந்த பல்கலைக்கழகங்களில் இருந்து அழைப்புக் கடிதம் அல்லது JW201 படிவத்தைப் பெற வேண்டும். பின்னர் அவர்கள் சீனாவுக்குச் செல்வதற்காக கோலாலம்பூரில் உள்ள PRC தூதரகத்தில் தங்கள் விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்,” என்று அமைச்சகம் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 7) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2021 டிசம்பரில் PRC இன் மாநில ஆலோசகராக இருக்கும் வாங் யீ, கடந்த ஜூலை மாதம் கோலாலம்பூருக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவருக்கும் மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லாவுக்கும் இடையில் நடந்த உடன்படிக்கையை இது பின்பற்றுகிறது.

அமைச்சகத்தின் அறிக்கையின்படி, அழைப்புக் கடிதம் அல்லது JW201 படிவத்தைப் பெற்று, சிறப்பு விமானம் மூலம் சீனாவுக்குத் திரும்ப விரும்பும் மலேசிய மாணவர்கள், charter@malaysiaairlines.com என்ற MAS இன் மின்னஞ்சலைத் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

அத்தோடு வெளியுறவு அமைச்சகம் மற்றும் கோலாலம்பூரில் உள்ள PRC தூதரகம் மலேசியன் ஏர்லைன்ஸுடன் இணைந்து, விமானப் போக்குவரத்துத் துறை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை, மாணவர்கள் படிப்பைத் தொடர உதவும் வகையில் இந்த நடவடிக்கையை தொடரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here