கூட்டரசுப் பிரதேச குடிநுழைவுத்துறை துணை இயக்குநராக விஷ்ணுதரன் இன்று பதவியேற்றார்

கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேங் குடிநுழைவுத்துறை புதிய துணை இயக்குநராக விஷ்ணுதரன் த/பெ காளிமுத்து (வயது 36) இன்று பதவி ஏற்றார். கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேங் குடிநுழைவுத் துறையின் இளம் துணை இயக்குநராகவும் இந்த உயரிய பதவியில் அமரும் முதல் இந்தியராகவும் இவர் திகழ்கிறார்.

சுங்கை சிப்புட், டோவன்பி தோட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விஷ்ணு, 2013ஆம் ஆண்டில் குடிநுழைவுத்துறையில் சேர்ந்து சபா மாநில இமிகிரேஷன் உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கினார்.

 

தொடர்ந்து 2017 முதல் 2021 வரை மலாக்கா மாநில குடிநுழைவுத்துறை துணை இயக்குநராகச் சேவையாற்றினார். 2021 முதல் புத்ராஜெயா குடிநுழைவுத்துறையில் நிதிப் பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார்.

தந்தை மா.காளிமுத்து, தாயார் நா. பவானி, மனைவி அ. வினோதினி, 3 பிள்ளைகள். இவர்களில் இருவர் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கின்றனர். மூன்றாவது பிள்ளைக்கு வயது 1.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here