வெள்ளத்தை எதிர்கொள்ள தற்காலிக நிவாரண மையங்கள் தாயார் நிலையில் உள்ளன – நட்மா

புத்ராஜெயா, செப்டம்பர் 15 :

நாட்டில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கான தற்காலிக நிவாரண மையங்கள் இப்போது முழு திறனுடன் தயார் நிலையிலுள்ளன என்றும் அவ்வாறான மையங்களுக்குள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாது, ஆனால் பரிந்துரைக்கப்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா) தெரிவித்துள்ளது.

நடமா துணை இயக்குநர் ஜெனரல் (செயல்பாடுகள்) மியோர் இஸ்மாயில் மியோர் அக்கீம் கூறுகையில் , இது எதிர்வரும் நவம்பரில் தொடங்கி மார்ச் 2023 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை (MTL) 2022/2023 சீசனுக்கான தயாரிப்புகளுக்காக தமது துறை எடுத்த முடிவுகளில் ஒன்று என்று கூறினார்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல மற்றும் புதிதாக சமைத்த உணவைப் பெறுவதற்கு, கோத்தோங் -ரோயோங் அடிப்படையில் சமையல் நடவடிக்கைகளும் PPS இல் அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

“முகக்கவசங்களைப் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, கோவிட் -19 போன்ற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்க நிவாரண மையங்களில் இருப்பவர்கள் அவற்றை அணியுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம், ஆனால் அது கட்டாயமாக்கப்படாது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here