கம்போடியாவில் வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் தாயகம் திரும்பினர்

புத்ராஜெயா, செப்டம்பர் 16 :

கம்போடியாவில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட மேலும் 11 மலேசியர்கள், நேற்று இரவு 11.55 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (KLIA 2) பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற மோசடிக் கும்பல்களால் பாதிக்கப்பட்ட 153 பேரில் இதுவரை மொத்தம் 123 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

“பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து மீட்பதில் அவர்களால் கொடுக்கப்பட்ட சிறந்த ஒத்துழைப்புக்காக, கம்போடியா அரசாங்கத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் மூலம் அமைச்சகம் எங்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்க விரும்புகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டது.

“இன்னும் மோசடிக்கும்பல்களில் சிக்கியுள்ள எஞ்சியுள்ளோரை மீட்கும் நடவடிக்கை புனோம் பென்னில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் அமைச்சகம் தொடரும் என்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து மீட்டு, அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு கம்போடிய அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்,” என்று அவ்வறிக்கையில் அது கூறியது.

அந்த அறிக்கையின்படி, வெளிநாட்டில் மோசடி வேலை வாய்ப்பு கும்பல்களில் சிக்கியுள்ள மலேசிய குடிமக்களின் தனிநபர்கள் அல்லது உறவினர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள மலேசிய தூதரக உதவி பிரிவு மூலம் அல்லது bkrm@kln.gov.my என்ற மின்னஞ்சல் மூலம் அமைச்சகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

“மேலும், புனோம் பென்னில் உள்ள மலேசிய தூதரகத்தை mwphnompenh@kln.gov.my என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here