திரெங்கானுவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டால் சுமார் 360 கேமாஸ் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு ஆபத்து

கோப்புப்படம்

பெசூட், செப்டம்பர் 16 :

திரெங்கானு மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டால், சமூக மேம்பாட்டுத் துறை (கேமாஸ்) நடத்திவரும் சுமார் 360 குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று திரெங்கானு கேமாஸ் இயக்குநர் டாக்டர் ஃபரிதா மாட் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள மொத்தம் 900 கேமாஸ் குழந்தை பராமரிப்பு மையங்களில், கெமாமன், டுங்கூன், உலு திரெங்கானு மற்றும் பெசூட் ஆகிய மாவட்டங்கலிலுள்ள மையங்கள் வெள்ளம் தாக்கக்கூடிய ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகள் உள்ளன.

“இருப்பினும், பாதிக்கப்பட்ட மையங்களில் உள்ள கெமாஸ் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர்கள் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர்,” என்று, இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 16) கம்போங் லாபான் கோடக், லாபான் குபா மசூதியின் மைதானத்தில் நடந்த “Jom Masuk Kampung” என்ற மாநில அளவிலான இஸ்லாமிய கலை விழாவின் தொடக்கத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

பெசூட் நாடாளுமன்ற உறுப்பினரான ஃபெல்டா தலைவர் டான்ஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ இந்த நிகழ்வைத் ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here