வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் கம்போடியாவில் இருந்து தாயகம் திரும்பினர்

கோலாலம்பூர், செப்டம்பர் 20 :

கம்போடியாவில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து மலேசியர்கள் நேற்று நாடு திரும்பினர்.

இரவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட ஐந்து நபர்களும்நண்பகல் 2 மணிக்கு MH755 விமானம் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை (KLIA) வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கம்போடியாவில் வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட 158 வழக்குகளில் மொத்தம் 148 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

“வேலை மோசடிக் கும்பல்களிடமிருந்து காப்பாற்றப்பட்டவர்களில் 29 பேர் இன்னும் கம்போடியாவில் உள்ள குடிநுழைவு தடுப்புக் கிடங்கில் உள்ளனர், மீதமுள்ளவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

“புனோம் பென்னில் உள்ள மலேசியத் தூதரகம், வேலை மோசடிகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மலேசியர்களைக் கண்டறியும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தாய்லாந்தில் உள்ள வேலை மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்ட மொத்தம் 12 பேரும், லாவோஸ் மற்றும் மியான்மரில் முறையே 28 மற்றும் 54 மலேசியர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

“சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள மலேசிய தூதரகங்கள் தொடர்ந்து முயற்சிகளை தீவிரப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து மீட்க அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்” என்றும் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here