கணவனின் காப்புறுதியை பெற அடியாட்களை வைத்து கணவனை கொலை செய்த மனைவி கைது

கிள்ளான், செப்டம்பர் 21 :

தன் கணவனின் காப்புறுதியை பெற, அடியாட்களுக்கு RM10,000 கொடுத்து, அவர்களை கொள்ளையர்கள்போல மாறுவேடமிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தி, தனது சொந்தக் கணவரை கொலை செய்த பெண்ணின் தந்திரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, அந்த மனைவி திட்டமிட்டு ஒரு போலிக் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.

கடந்த வியாழன் அன்று சுங்கை உடாங்கில் உள்ள தாமான் அனேகா பாருவில் உள்ள அவரது வீட்டில், 37 வயதுடைய சந்தேகநபரின் இந்த கொலைச் சதியை செய்யத்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் மனைவி முன்னர், தங்கள் வீட்டை ஒரு கும்பல் கொள்ளையடித்ததாகவும், அப்போது அவர்களுக்கும் தந்து கணவருக்கும் இடையே நடந்த கைகலப்பில் அவர்கள் தனது கணவரையும் கத்தியால் குத்திக் கொன்றதாகவும் போலீஸ் புகார் அளித்ததாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது தந்திரமான திட்டம் அம்பலமானது.

அவரிடமிருந்து பதிவு செய்யப்பட்ட சாட்சியத்தில் முரண்பாடு இருந்ததால், அவரை மேலும் விசாரித்ததில் தான் கணவரின் கொலையைத் திட்டமிட்டதாக இறுதியில் அவர் ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் தனக்கு அறிமுகமான ஆண் ஒருவர் மூலம் கொலையாளியின் சேவையை நாடியதாகவும், கொலையாளிக்கு முன்பணம் கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

“ஆரம்பத்தில் தனது கணவர் அடிக்கடி தன்னை அடித்து துன்புறுத்தியதால்தான், தான் கணவனைக் கொல்லும் திட்டத்தை திட்டியதாக கூறினார். இருப்பினும், சம்பவம் (கொலை) நடப்பதற்கு முன்பு அந்தப் பெண் காப்பீட்டுத் தொகையை மேம்படுத்தியிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. ,” என்று அவர் நேற்று கூறினார்.

நேற்று, சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமது கூறுகையில், கடந்த வியாழக்கிழமை (செப்.15) அதிகாலை 2.14 மணியளவில், ஒரு வீட்டில் கும்பல் ஒன்றிற்ற்கும் ஒரு ஆடவருக்கும் இடையில் சண்டை நடப்பதாகவும், ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும் பொதுமக்களிடம் இருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழு, 41 வயதுடைய நபர் 14 கத்திக்குத்து காயங்களால் இறந்ததை உறுதிப்படுத்தியது,” என்று அவர் கூறினார்.

கறுப்பு நிற உடை, முகமூடி அணிந்து, கையில் கத்தி என நம்பப்படும் ஆயுதம் ஏந்திய இருவர், முன் கதவு வழியாக வீட்டுக்குள் நுழைந்ததாகவும், தனது கணவரைக் குத்திக் கொன்றதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்ததாக அர்ஜுனாய்டி கூறினார்.

மேலும் தமது வீட்டிலிருந்து கொள்ளையர்கள் பல்வேறு பிராண்டட் கைப்பைகள், நகைகள் மற்றும் சுமார் RM40,000 மதிப்புள்ள பணத்தை சூறையாடிவிட்டு BMW காரில் தப்பிச் சென்றதாக அந்த பெண் கூறினார். இந்தகொள்ளையில் மொத்த இழப்பு RM100,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அறிக்கை கிடைத்த 24 மணி நேரத்திற்குள், 37 வயதுடைய பாதிக்கப்பட்டவரின் பெண்ணை இரவு 10 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட பெண் மற்றும் நான்கு சந்தேக நபர்களும் செப்டம்பர் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் மற்றும் ஆயுதம் மூலம் கும்பல் கொள்ளையடிக்கும் தண்டனைச் சட்டம் பிரிவு 395/397 ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here