கோலாலம்பூர், செப்டம்பர் 21 :
கடந்த திங்கட்கிழமை இங்குள்ள தாமான் ஸ்ரீ செந்தோசாவில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் சோதனை நடத்தியதில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் நால்வரை போலீசார் கைது செய்தனர்.
கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர், டத்தோ யஹாயா ஓத்மான் கூறுகையில், இந்த சோதனையில் 5.4 கிலோகிராம் சியாபுவை போலீசார் கைப்பற்றினர், அதன் மதிப்பு RM193,680 என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள சந்தைகளுக்கு விநியோகிப்பதற்காக, தீபகற்பத்தின் வடக்கில் உள்ள ஒரு மாநிலத்திலிருந்து போதைப்பொருள் விநியோகத்தைப் பெற்றுவந்ததாகவும், இந்தக்கும்பல் நான்கு மாதங்களுக்கு முன்பிரிந்து செயல்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட 34 முதல் 43 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் வேலையில்லாதவர்கள் என்றும், அவர்களில் மூவர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு முந்தைய பதிவுகளைக் கொண்டவர்கள் என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ், விசாரணைக்காக அவர்கள் செப்டம்பர் 26 வரை போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று யஹாயா ஓத்மான் கூறினார்.