DIBW 2023இன்போது சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மலேசியர்கள் கைது

ஜோகூர் பாரு, டேசாரு அனைத்துலக பைக் வீக் (DIBW) 2023 இன் போது  சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உள்ளூர் ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிறிய காயங்களுக்கு உள்ளான 30 மற்றும் 50 வயதுடைய ஆடவர்கள், நகரத்திலும் கோத்தா திங்கியிலும் இன்று கைது செய்யப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் கமருல் ஜமான் மாமத் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவருக்கு  தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டு கோத்தா திங்கி மருத்துவமனையில் வெளிநோயாளியாக இருக்கிறார் என்றார். உள்ளூர் மற்றும் அமெரிக்க பைக்கர் குழுவிற்கு இடையே நேற்று இரவு 9 மணியளவில் சண்டை ஏற்பட்டது. இது தவறான புரிதலால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்றார். எத்தனை பேர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை, அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த குழுவில் சுமார் 70 முதல் 80 பேர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் அணிகள் ஒன்றுக்கொன்று சவால் விட்டு கொண்டதாக நம்புகிறோம். ஜோகூர் காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, நாங்கள் இந்த வழக்கை உன்னிப்பாக விசாரித்து வருகிறோம் என்று கூறினார். நிகழ்ச்சியில் 350 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றார். இதனால் போலீசார் உடனடியாக கலவரத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுபோன்ற நிகழ்வுகளின் போது சண்டையிடும் யாருடனும் போலீசார் சமரசம் செய்ய மாட்டார்கள் என்று கமருல் கூறினார். அதிக சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களிடையே சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் திட்டம் என்பதால் இதுபோன்ற சண்டைகள் வரக்கூடாது. எனவே, சம்பந்தப்பட்டவர்களை நான் எச்சரிக்கிறேன். சரணடையுங்கள் அல்லது நாங்கள் உங்களைப் பின்தொடர்வோம் என்று அவர் கூறினார். நாற்காலிகள் மற்றும் குச்சிகள் வீசப்பட்ட குழு சண்டையிடுவதைக் காட்டும் சில வீடியோ கிளிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here