கிள்ளான், செப்டம்பர் 22 :
பண்டார் சுல்தான் சுலைமான் நோக்கிச் செல்லும் வடக்கு கிள்ளான் நெடுஞ்சாலையின் 3.4 ஆவது கிலோமீட்டரில், நேற்றிரவு அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் லோரியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் எஸ்.விஜயா ராவ் கூறுகையில், இரவு 9 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வேலையை முடித்து விட்டு, மீண்டும் வேலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
“இவ்விபத்தின்போது, லோரி ஷா ஆலாம் திசையில் இருந்து பண்டார் சுல்தான் சுலைமான் நோக்கி வந்தது , பாதிக்கப்பட்டவர்கள் ரந்தாவ் பாஞ்சாங்கின் திசையிலிருந்து பண்டார் சுல்தான் சுலைமான் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
“பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் பாதையில் இடதுபுறம் திரும்பியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
“அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட லோரிக்கு அவர்களை தவிக்க நேரமில்லாமல் போனதால், லோரி பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கியது, சகபாடிகள் இருவரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது.
“மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லோரியின் இடது முன்பக்க டயரில் சிக்கி நசுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார், அதே சமயம் பின்னால் உட்க்கார்ந்து சவாரி செய்தவர் லோரியின் பின்னால் காணப்பட்டார்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
விஜய ராவ் கூறுகையில், பலியான இருவரும் உள்ளூர் ஆண்கள் என்றும், அங்கு 41 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் 18 வயதான பின்னிருக்கை பயணியும் பண்டார் சுல்தான் சுலைமானின் ஒன்றாக வேலைபார்த்துவருவதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
“இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை நோக்கங்களுக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு (HTAR) கொண்டு செல்லப்பட்டன,” என்று அவர் கூறினார்.
தஞ்சோங் செப்பாட்டில் வசிக்கும் 27 வயது நிரம்பிய லோரி ஓட்டுநருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இவ்வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன்படி விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.