ஜோகூர்:
ஜோகூர் குடிநுழைவு துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி நாஸ் சுஃபியான் நாஸ்ருன், ஏற்கெனவே பணம் மோசடி குற்றச்சாட்டு விசாரணைக்கு முகம்கொடுத்து வந்த அதேவேளை RM718,710 சம்பந்தமான மேலும் ஒரு குற்றச்சாட்டுக்கு இன்று கோலாலம்பூரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். எனினும் தாம் குற்றமற்றவர் என குற்றத்தை மறுத்தார்.
2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் RM933,295 குறித்த ஐந்து பண மோசடி குற்றச்சாட்டுகளுக்காக ஜூலை 22-ஆம் தேதி ஷா ஆலமில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அதற்கும் குற்றமற்றவர் தாம் என பதிலளித்திருந்தார்.
இந்த புதிய வழக்கில், 2022 ஜூலை 26 முதல் 2023 ஜூன் 9 வரை 64 ஆன்லைன் பரிமாற்றம் மூலம் தனி நபரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு நிறுவன கணக்கிற்கு பணம் மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவரை, நீதிபதி Rosli Ahmad, RM100,000 பிணையில் ஒரு உத்தரவாதத்துடன் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார் மற்றும் வழக்கை ஷா ஆலமுக்கு மாற்றவும் ஒப்புதல் அளித்தார்.





















