கிள்ளான் பள்ளத்தாக்கில் வாகன திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் 4 பேர் கைது

செர்டாங்: கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏராளமான வாகன திருட்டுகள் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 27 முதல் 37 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் பெட்டாலிங் ஜெயா மற்றும் டாங் வாங்கி ஆகிய இடங்களில் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தடுத்து வைக்கப்பட்டதாக Serdang OCPD ஏ.ஏ.அன்பழகன் கூறினார். எட்டு மொபைல் போன்கள், மூன்று கார்கள், ஒரு லேப்டாப், ஒரு கத்தி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நாங்கள் கைப்பற்றினோம்.

சந்தேக நபர்கள் தலைகவசம் மற்றும் முகமூடிகளை அணிந்திருந்தனர். அதே போல் வாடகைக்கு எடுக்கப்பட்ட கார்களையும் கொள்ளையடித்ததாக நாங்கள் நம்புகிறோம். அவர்கள் காருடன் தப்பிச் செல்வதற்கு முன், பாதிக்கப்பட்டவரை கத்தியைப் பயன்படுத்தி மிரட்டி கொள்ளையடிப்பார்கள் என்று அவர் திங்கள்கிழமை (செப்டம்பர் 26) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல் செர்டாங், காஜாங் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் பல்வேறு வாகனத் திருட்டுகளில் சந்தேக நபர்கள் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏசிபி அன்பழகன் தெரிவித்தார். குறைந்தது மூன்று வாகன திருட்டு வழக்குகளுக்கு அவர்கள் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறிய அவர், சந்தேகநபர்கள் பல்வேறு குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் கூறினார். குற்றச் செயல்கள், குறிப்பாக வாகனத் திருட்டு குறித்து தகவல் தெரிந்தவர்கள், காவல்துறையை விரைவில் தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி அன்பழகன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here