சிரம்பான், செப்டம்பர் 27 :
பாமாயில் ஏற்றிச் சென்ற டேங்கர் லோரி சாலையில் கவிழ்ந்து, சரக்குகளை கொட்டியதால், ஜாலான் சிரம்பான்-கோலப்பிலா சாலையின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 26) இரவு 7.15 மணியளவில் செனவாங் நோக்கிச் செல்லும் சாலையின் வெளியேறும் பாதையில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்கள் எண்ணெய் கசிவைச் சுத்தம் செய்திருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக காலவரையின்றி முடக்கத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
மேலும் வாகன ஓட்டிகள், தங்கள் இடங்களுக்கு செல்ல மாற்று வழிகளை பயன்படுத்தலாம் என்றார்.